அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும் நிறையவே இருக்கின்றன.