அவுஸ்ரேலியக் காடுகள் ஏன் எரிகின்றன?

(ஜெயக்குமாரன் சந்திரசேகரம்)

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது?

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும்.