இத்தியடி சந்தி

எமது ஊரில் நிறைய வீதிகளின் சந்திப்பு காணப்பட்டாலும் முக்கிய பிரபல்யமான சந்தி இத்தியடி சந்தியாகும்! மின்சார இணைப்பு எம் ஊருக்கு ஏற்படுத்து முன்பு இருந்த நிலையினை இங்கு முதலில் பார்க்கலாம். நடுவே ஒரு இத்திமரம், தெற்கே மலைவேம்பு, மேற்கே நிழல் வாகைமரமும்,வடபுறம் நிழல்வாகையும் இத்திமரமும் ஓங்கி படர்ந்து வளர்ந்து நல்லதொரு அருமையான அழகான சூழலினை அமைதியானவகையாக தந்து கொண்டிருந்தன.