சாதிய வெறி

இழிசாதியினர் என்று சொல்லி மலத்தை வாயில் திணிப்பது தமிழ்நாட்டில்தான் நடக்கின்றது .ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொலைசெய்வதும், பலர் கூடியிருக்க நிர்வாணமாக்கி அடித்துச் சித்திரவதை பண்ணுவதும் , கலப்புத் திருமணம் செய்தால் அடித்துக் கொலைசெய்வதும், தமிழ்நாட்டில்தானே நடக்கின்றது. இலங்கைத் தமிழர் மத்தியிலே
இப்படியெல்லாம் நடக்கின்றதா?

அப்படி யாராவது உயர் சாதியினன் செய்தால் இங்கு வெட்டிப்புதைத்து விடுவார்கள். உயர் குலத்தோர் என்று சொல்லிக்கொண்டு புலம்புவோரால் ஒடுக்கப்பட்ட இனத்தவர்கள் என்று சொல்வோரின் ஒரு மயிரைக்கூட இப்போது புடுங்க முடியாது.

பெரியார், அம்பேத்கார் என்று எத்தனையோ பேர் குரல் எழுப்பியும், வழிகாட்டியும்கூடத் தமிழ்நாட்டில் சாதி வெறி உக்கிரம் கூடியிருக்கின்றதே தவிரக் குறையவில்லையே. ” மனுசங்கடா பாடலைப் பாடியவரும், தலித்துக்களின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவரும், ‘வடு’ நூல் ஆசிரியருமாகிய காலம் சென்ற , குணசேகரன் அவர்கள் ஓரிடத்தில் சொல்லி இருந்தார், ‘இப்போதும் எனது ஊருக்குள் நுழையும்போது செருப்பைக் கழற்றி விட்டுத்தான் செல்கின்றேன்’ என்று. இலங்கையில் இப்படியெல்லாம் இப்போது கிடையாது.

சாதிவெறி இன்னும் இருக்கின்றதுதான். ஆனால், தமிழ்நாட்டில் இடம்பெறும் கொடுமைகள்போல இல்லவேயில்லை. இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டைச் சேர்ந்த என் விருப்பத்துக்குரிய நண்பர் ஒருவர் எழுதியதைப் போனால் போகட்டும் என்று என்னால் கடந்துபோக முடியவில்லை. அவர் பொத்தாம் பொதுவில் இலங்கைத்தமிழர் பற்றி எழுதியிருக்கும் விதம் வருத்தமளித்ததால் இதை எழுதவேண்டி வந்தது.