சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம்

(என்.சரவணன்)

பரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு  வாக்கம் தான். 
குடும்பப் பெயர் + நடுப்பெயர் + வழங்கப்பட்ட பெயர் என்கிற பெயர்களை சேர்த்து கோர்த்து அழைப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இலங்கையில் சிங்கள சமூகத்தில் “பெயரிடுதல்” என்பது தனிச் சிறப்பைக் கொண்டிருக்கிறது. தனியான முறைமையையும் கொண்டிருக்கிறது. மேலும் வர்க்கம், சாதி, குலப்பெருமை, பதவி, பட்டம், ஊர்ப்பெருமை போன்றவற்றை உள்ளடக்கியதாக இப்பெயர்கள் அமைந்திருப்பதும் அதை தலைமுறை தலைமுறைக்கும் கடத்துவதும் ஒரு பண்பாட்டு வழக்கமாக இருந்து வருகிறது.