செரினா

செரினாவை நினைத்தவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வருகிற முதல் காட்சியென்பது, குக்கூ நிலத்தின் மண்கட்டிடத்துள் ஒரு சிறு அகல்விளக்கு முன்பாக, நான்கைந்து மணிநேரங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தித்த குரலும், கண்ணீரோடு கூடிய விம்மல் சத்தமும் சேர்ந்த அன்றைய தினம்தான்! ஆனந்த விகடன் இதழால் சாத்தியமடைந்துள்ள இக்காணொளி, மனதிற்குள் மிகுந்த நெகிழ்வையும், பரவசத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. இதனை நிகழ்த்தித்தந்த தோழமை வெ. நீலகண்டன் அவர்களுக்கு எங்கள்கரங்குவிந்த நன்றிகள்!