தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு இப்போதாவது வழி பிறக்குமா?

கரோனாவுக்கு எதிரான போரில் அரசுத் துறை நிறுவனங்களின் தேவைகளையும் சேவைகளையும் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சித் துறைகள் பாராட்டப்படுகின்றன. தூய்மைப் பணியாளர்களின் சவால் நிறைந்த பணியையும் சமூகம் உணரத் தலைப்படுகிறது என்றாலும் மற்ற துறைகளுக்கு இருக்கும் அதிகாரமோ, கிடைக்கும் மரியாதையோ, மற்றவர்கள் பெறும் உரிமைகளோ எதுவும் என்றைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.