நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

(Maniam Shanmugam)
1970ஆம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் இலங்கைத் தேசியத்தை அடிப்படையாக வைத்து பொருளாதார, அரசியல், கலாச்சாரத் துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து வந்த மூன்றாத்தர, நாலாந்தர மஞ்சள் மற்றும் நச்சு வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.