பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 2)


(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

வியட்நாம் கையாண்ட அணுகு முறையை சற்று விரிவாக பார்ப்போம்:
ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி, 95.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடான வியட்நாமில் 268 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 தொற்றாளர்கள், 171 வைரசில் இருந்து மீட்கப்பட்டவர்கள், 1,35,938 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மற்றும் பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்பன பதிவாகியுள்ளன. கோவிட் – 19 தொற்று நோயால் எந்த மரணமும் ஏற்படாததாகக் கூறப்படும் மிகச் சில நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி விடயமாகும்.