போர்க்காலம் கற்றுத் தந்த சொற்கள்.

(வேதநாயகம் தபேந்திரன்)

இலங்கைத் தீவை ஆட்டிப் படைத்து வாழ்வின் அனைத்துத் தளங்களையும் அசைத்து விட்ட மூன்று தசாப்த காலப்போர் முடிந்து விட்டது. முற்றுப்பெற்று விட்டபோர் சில சொற்களையும் மரபுகளையும் கற்றுத்தந்துவிட்டே போயுள்ளது.