வல்லாதிக்க நாடுகளின் புதிய ஆயுதம்!

(Maniam Shanmugam)

மேற்குலக நாடுகள் தமது உலக ஆதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதற்காக புதிய புதிய ஆயுதங்களைக் கண்டு பிடித்து வருவதில் சமர்த்தானவை. இப்பொழுது அவை கண்டு பிடித்திருக்கும் ஆயுதம் கொவிட் – 19இற்கு எதிரான தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி இந்த ஆதிக்க நாடுகளால் கொவிட்டுக்கு எதிராக மட்டுமின்றி, ஏழை நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. புள்ளி விபரங்களைப் பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம்.