ஓ இலங்கை அரசாங்கமே!

இசுலாமியர் உங்களிடம்
எதைக் கேட்டுவிட்டார்கள் என்று
அடிக்கிறீர்கள்?

அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்
கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை
என்பதால் தானே
இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.

அவர்கள் தம் பெண்களைக்கூட
வேலைக்கு அனுப்புவது இல்லையே!
மொத்தக் குடும்பத்தையும் தனிமனிதனாக
நின்று உழைத்துக் காப்பாற்றும்
சுத்த வீரர்களா உங்களிடம்
வேலைப்பிச்சைக் கேட்கப் போகிறார்கள்

அரசாங்கத்திடம் காசுபணம்
கடனுக்காவது கேட்டார்களா?
உலக வங்கியிடம் நாட்டை அடகுவைத்த
கடனாளி உங்களிடமா அவர்கள்
கடன் கேட்கப் போகிறார்கள்

குடித்துக் கும்மாளமிட மனைவியின்
தங்க நகைகளை அடகு வைக்கும்
இனமல்ல அவர்கள்.
வட்டியே கூடாது என்று வங்கியில் கூட
வேலை செய்யாத ஒரு இனம்
உங்களிடம் கடன் கேட்கவா போகிறது?

அரசாங்கத்திடம் தமது விகிதாசாரத்திற்கேட்ப
கல்வி கேட்டார்களா?
நாட்டின் பல முட்டாள்களில் இருந்து
மிகச்சிறந்த சில அடிமுட்டாள்களாகத்
தெரிவு செய்யப்பட்ட உங்களிடமா
அவர்கள் கல்வியைக் கேட்பார்கள்

கணிதத்தின் ஆணிவேரான அல்ஜிப்ரா
இரசாயணவியலின் தோற்றமான அல்கெமி
வானவியலில் விண்தொட்ட அல்பத்தானி
பரம்பரையில் வந்தவர்களா உங்களிடம்
கல்விக்காகக் கையேந்தப் போகிறார்கள்?

உங்களிடம் அவர்கள் ஒன்றே ஒன்றுதான்
கேட்கிறார்கள்
இந்த நாட்டில் எங்களை சுதந்திரமாக
வாழவிடுங்கள்
எங்களைத் தாக்கும்போது எங்களுக்குப்
பாதுகாப்புத் தாருங்கள்

திருப்பித் தாக்குவது ஒன்றும் அவர்களுக்கு
பெரிய வேலை இல்லை
நாட்டுச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்பது
அவர்கள் கொள்கை

காலித் வலித், உமர் கத்தாப் பரம்பரையில்
வந்தவர்களுக்கு நீங்கள்
உங்கள் வீரத்தைக் காட்டவா நினைக்கிறீர்கள்.
உங்களுக்குத் தைரியம் இருந்தால்
உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால்
உங்கள் ராணுத்தையும் சட்டத்தையும்
ஒரே ஒரு நாளைக்கு மட்டும்
ஓரமாக ஒதுக்கிவிட்டு இனவாதிகளை
அனுப்பிப் பாருங்கள்
உங்களிடம் இனிமேல் அவர்கள்
பாதுகாப்பும் கேட்க மாட்டார்கள்

நீங்கள் பள்ளிவாசல்களை உடைக்கிறீர்கள்
கடைகளுக்குத் தீ வைக்கிறீர்கள்
வீடுகளைச் சேதம் செய்கிறீர்கள்
திருப்பித் தாக்க முடியாத உயிரற்றவை மீது
நீங்கள் கை வைப்பதே உங்களைக்
கோழை என்று காட்டிவிட்டது

நீங்கள் உடைக்க வேண்டும்; பள்ளியை அல்ல
இஸ்லாமிய மதத்தை
நீங்கள் கொளுத்த வேண்டும்; கடையை அல்ல
இஸ்லாமியக் கொள்கையை
நீங்கள் சேதம் செய்ய வேண்டும்; வீட்டை அல்ல
இஸ்லாமியக் கோட்பாட்டை

அவர்களோடு நேருக்கு நேராக நின்று
நெஞ்சுநிமிர்தி விவாதம் செய்து இதைச்
செய்து காட்டினால்
உண்மையில் நீங்கள் சுத்த வீரர்கள்தான்.
கருத்தில் தோற்பவன்தான் முதலில்
கையைத் தூக்குவான்.

நீங்கள் பதவி போய்விடும் என்று அஞ்சுபவர்கள்
அவர்கள் உயிர் போய்விடுமோ என்றுகூட
அஞ்சாதவர்கள்
நிறைவேற்ற முடியவில்லை என்று
கவலைப்படுகிறார்
நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி

நாட்டுக்கும் உங்கள் சந்ததிக்கும்
நலவுநாட நீங்கள் நினைத்தால்
ஒன்றே ஒன்று மட்டும் செய்யுங்கள்
உங்களை நீங்களே குத்திக்கொண்டு
செத்துப்போய்விடுங்கள்.

(மது மதி)