இன்னுமொரு_முள்ளிவாய்க்கால்

மூச்சுவிட முடியாமல்
ஒரு தேசம் திணறுகின்றது
காற்றெல்லாம் கந்தக வாசனை
வெட்டப்பட வேள்வியாடுகளாய்
மனிதம் சிதறிக்கிடக்கின்றதே
இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகிறது…!

இதை யாரும் பேசவில்லையே
ஏனென்று கேட்டிட நாதியற்று
சிரியா சிதைக்கப்படுகின்றதே
அலெப்போவின் அழுகுரல்கள்
உலக அரங்கில் கேட்கவில்லையோ…?

மனிதவுரிமை பேசிடும்
மன்றங்கள் எல்லாம்
மௌனித்தே கிடக்கிறது..!
எல்லாம் முடிந்தபின்
கண்டன குரல்களும்
சில எலும்பு துண்டுகளாய்
தீர்மானங்களும் கொண்டுவரப்படுமே….!

இப்போது பேச மறுத்தவர்கள்
இறந்தபின் இனப்படுகொலையா..
இல்லையது மனிதவுரிமை மீறலே..
இப்படி பேசிவிட்டு நாளை
இதையும் கடந்து போய்விடுவார்களே….!!

இன்னுமொரு முள்ளிவாய்க்கால்
இங்கேதான் அரங்கேற்றப்படுகின்றது….

நன்றி அ.பவளம் பகீர்.