காலாவதியான (காலம்) கஞ்சி .

கொதித்த சுடுநீருக்குள்
தீட்டல் அரிசியை கலந்து
அவியவிட்டு இறக்கினால் கஞ்சி .
பால் மறந்த கஞ்சி.
கஞ்சிக்கு மட்டுமல்ல
பிறந்த குழந்தைக்கும் பாலற்று
சுருங்கிக்கிடந்தன முலைகள்.