நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.


……………………………………

டாக்டர்: என்ன வருத்தம்?
நோயாளி 2: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 2: டீக்கடை வச்சிக்கிறேனுங்க.
டாக்டர்: ஆஸ்பத்திரியில ஒருநாள் தங்கியிருங்க. நாளைக்கு வீட்டுக்குப் போயிடலாம். ஒரு ஐயாயிரம் ரூவா வரை செலவாகும்.
……………………………………..

டாக்டர்: என்ன வருத்தம்?
நோயாளி 3: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 3 : ஒரு கம்பெனியில் டைரக்டரா இருக்கேனுங்க.
டாக்டர்: ஒரு இரண்டு லட்சம் முற்பணம் கட்டி, ICU ல அட்மிட் ஆகிடுங்க….என்னானு பார்த்துடலாம்.
………………………………………

டாக்டர்: என்ன வருத்தம்?
நோயாளி 4 : தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 4: இம்போர்ட், எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்றேன் டாக்டர். அமெரிக்கால கூட நாலு சூப்பர் மார்க்கட் இருக்கு.
டாக்டர்: உடனடியா உங்களுக்கு ஆப்பரேஷன் பண்ணனும். கவுண்டர்ல அஞ்சு லட்சம் அட்வான்ஸ் கட்டிடுங்க!
-எஸ். ஹமீத்.