யாழ்ப்பாணத்திற்குஒருஆறு

குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கு ஏனைய பகுதிகளில் பெறப்படும் செல்வமாகிய மேலதிக மழை நீரை இப்பகுதிக்கு பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு நியாய பூர்வமான விருப்பமாகும்.
1930ம் தசாப்த ஆரம்பத்தில் குடாநாட்டில் பரந்திருந்த உவர் நீர் ஏரிகளை பயன்படுத்தும் முகமாக அவற்றை நன்னீராக்க வேண்டும் என்ற கருத்தை காலஞ் சென்ற சட்டவாக்க சபை உறுப்பினரான மு.பாலசிங்கம் அவர்கள் தனது மனதில் உருவாக்கினார்.

மாமன்னர் பராக்கிரமபாகுவின் சிந்தனையின் ரூபமான மிகவும் பரவலாக பேசப்பட்ட கருத்தானது ‘வானத்திலிருந்து விழும் ஒரு மழைத்துளியும் மண்ணுக்கு பயன்படாமல் கடலை சென்றடைய விடக்கூடாது’ என்ற சித்தாந்தமே மதிப்புக்குரிய மு.பாலசிங்கம் அவர்களது கருத்தாகும்.

இந்தச் சிந்தனையே வட மாகாணத்தின் முக்கிய ஆதாரமான கனகராயன் ஆற்றின் வெள்ள நீரை முற்று முழுதாக பயன்படுத்துவது என்ற எண்ணக்கரு உருவாக வழி கோலியது. இந்த ஆறு வவுனியாவில் உருவாகி புளியங்குளம் மாங்குளம் ஊடாக இரணைமடுக் குளத்தை நிரப்புகின்றது.

இதன் மேலதிக நீர் ஆனையிறவு ஏரியை அடைகின்றது. இது ஆனையிறவு பாலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடலுடன் இம் மேலதிக நீரானது வீணாக இப் பாலத்தினுடாக பெருங்கடலை சென்றடைகிறது.

1949 மாசியில் ஓர் நாளில் இத் தெரு ஊடாக சுற்றுலாவிற்கு சென்ற குடும்பத்தினர் ஆனையிறவு பாலத்தின் அண்மையில் நண்பகல் உணவிற்காக இளைப்பாறினர். அவரின் சிறிய மகன் இவ் ஏரியில் கை கழுவும் பொழுது ஏரியின் மேற்குப்பகுதி கடலுடன் தொடர்புடையதாக இருந்தாலும் கிழக்குப் பகுதியில் நன்னீர் இருப்பது எவ்வாறு? என்று கேட்ட வினாவிற்கு அன்பான தந்தை அதன் காரணத்தை விளக்கினார்.

இந்தச் சிறுவன் உடனடியாக ‘நாங்கள் கொஞ்ச மண்ணை காரில் கொண்டுவந்து இந்தப் பாலத்தை நிரப்புவோம், இதனால் நன்னீர் ஏரி உருவாகும் என்று பதிலளித்தான்.

அந்த வருடம் கனகராயன் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இரணைமடுக் குளம் நிரம்பி வான் பாய்ந்தது. மேலதிக நீர் தெருவின் கிழக்கில் உள்ள ஆனையிறவு ஏரியை நிரப்பியது.

இரணைமடுக் குளம் தை மாதத்தில் வான் பாயவிடப்பட்டாலும் மாசி மாதத்தில் கூட கிழக்கு ஏரி நன்னீராகவே காணப்பட்டது. எனினும் இப்பாலத்தினை மண் கொண்டுவந்து நிரப்பினாலொழிய இந்நீர் பாலத்தினூடாக கலக்கும் கடல்நீரால் விரைவாக உவர்நீராக மாறிவிடும்.

தற்போது நடைமுறைப்படுத்தும் ஆனையிறவு ஏரியை நன்னீராக்கும் திட்டத்தின் அடிப்படையானது கிழக்கு ஏரி வருடம் முழுவதும் நன்னீராகவே இருக்க வேண்டும்.

ஆனையிறவு ஏரி ஆனையிறவு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுள்ள சுமார் 11,400 ஏக்கர் பரப்பை கொண்டது. இவ் ஏரி கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமந்தலாறு, தேராவில் ஆறு மற்றும் சிற்றாறுகளிலிருந்து வரும் நீரை பெறுகின்றது.

இதன் வடக்கே வானைக் குளமும் தெற்கே கரைச்சி காணிகளையும் கொண்டுள்ளது. பாலத்திற்கு அருகில் ஓர் தடுப்பை ஏற்படுத்தி சுண்டிக்குளத்திற்கு அண்மையில் பொருத்தமான வான்கட்டை அமைப்பதனுாடாக இவ் ஏரிக்குள் உட்புகும் நன்னீரானது ஆனையிறவு நன்னீர் தேக்கமாக உருவாகும்.

முள்ளியான் பகுதியூடாக வடக்கில் அமைந்த வாய்க்கால்கள் இந்நீர் தேக்கத்தை யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரியாகிய வடமராட்சியைத் தொடும்.

நீண்ட நீர்ப்பரப்பை உடைய வடமராட்சி ஏரியானது பச்சிலைப்பள்ளியில் அமைந்த முள்ளியானில் இருந்து செம்பியன்பற்று, எழுதுமட்டுவாள், வரணி, கரவெட்டி, வல்லைவெளி, ஊடாக பரந்து சென்று வல்வெட்டித்துறைக்கு அண்மையில் உள்ள தொண்டமானாற்றினூடாக கடலுடன் தொடுக்கிறது. இதன் கிளையானது சரசாலையில் தொடங்கி யாழ்ப்பாணப் பட்டினம் நோக்கி பரந்து செம்மணிக்கு அண்மையில் உள்ள அரியாலைக் கடலை அடைகின்றது.

இது கிட்டத்தட்ட ஒரு மைல் அகலமாக குடாநாட்டில் இருதயப் பகுதியில் கூடுதலாகவோ குறைவாகவோ முழுமையாக பரந்து காணப்படுகின்றது. இது குடாநாட்டின் வாழ்க்கையிலே தாக்கத்தை செலுத்தும் முழுமையான வைப்பகமாக இருக்கிறது.

தொண்டமானாற்றில் பூர்த்தியாக்கப்பட்ட 600 அடி நீளமான தடுப்பணை ஊடாக கடல் நீர் உட்புகுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் செய்யப்பட வேண்டிய வேலைத்திட்டம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

ஆனையிறவு பாலத்திற்கு அருகிலே உள்ள தடுப்பணை கனகராயன் ஆற்றிலிருந்து வரும் வெள்ள நீரை சேமித்து பாதுகாத்து மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீர் ஊடுருவாமல் தடுக்கும்.

இதன் கிழக்கு எல்லையில் சுண்டிக்குளத்தில் அமைந்த ஒன்றேகால் (1.25) மைல் நீளமான பாதையோடு இணைத்து கட்டப்பட்ட தடுப்பணையும், வானும் மேலதிக வெள்ள நீரை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்கும், கடல் நீர் கிழக்கிலுள்ள ஏரியினுள் உட்புகாலும் உறுதிப்படுத்தும், இவ்வாறு கிழக்கிலும் மேற்கிலும் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மேலதிக வெள்ள நீரை பெற்று பாதுகாப்பாக சேமித்து வைக்கும்.

அதே நேரத்தில் இதன் மூன்றாவது அங்கமான இணைப்புக் கால்வாய் தேங்கிய நீரை யாழ்ப்பாண குடாநாட்டின் இருதயப்பகுதிக்கு கொண்டு செல்லும், இவ் வேலைத்திட்டத்தின் முடிவில் கனகராயன் ஆற்றின் வெள்ள நீர் ஆனையிறவு ஏரி மற்றும் வடமராட்சி ஏரிகளின் உவர் நீர் தன்மையை படிப்படியாக நீக்குவதற்கு பயன்படும்.

வண்டல் படுக்கை அமைந்த இரண்டாம் நிலை தேக்கத்திலும் பார்க்க உவர் நீர் வெளியேறி களிமண் படுக்கையுள்ள முதன்மை நீர்த்தேக்கம் அமைவதற்கு விரைவுபடுத்தும். குறுகிய காலத்தில் உவர்த்தன்மை குறைப்பானது உடனடியாக முடிவுக்கு கொன்டுவரப்பட முடியாத போதிலும் இதனால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்கு அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை.

இதன் பயன்கள் உடனடியாக வந்தடையாமல் ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்பும் மேலும் மேலும் விருத்தியடையும். மேலும் பகுதியான உவர் நீரானது பயன்படுத்த முடியாவிட்டாலும் வேளாண்மைக்கு உகந்ததாக காணப்படும் அதேவேளை இந்நிலை குடா நாட்டின் கரையோரப் பகுதிகளில் உள்ள பல கிணறுகள் மூலமாக செய்யப்படும் வேளாண்மையினால் இது புலப்படும்.

நாட்கள் செல்லச் செல்ல மாசி பங்குனி சித்திரை மாதங்களில் உள்ள கூடிய வெப்பத்தினால் குறிப்பிடத்தக்க ஆவியாதல் நிகழும் இரண்டாம் நிலை நீர்த்தேக்கத்தின் கூடிய அளவான நீர் இழப்பை ஆனையிறவு நீர் தேக்கத்திலிருந்து நீரை கால்வாயினுடாக செலுத்தி இரண்டாம் நிலை தேக்கத்தை தொடர்ந்தும் நிரம்பல் நிலையில் வைத்திருக்கலாம்.

இவ்வாறான நிரப்பு நிலையானது தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக் காலமான ஆனி, ஆடி மாதங்களில் ஏற்படும் பாரியளவு ஆவியாதலின் விளைவாக இச் செயற்பாடு சாத்தியமற்றதாக இருக்கும்.

இதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஏரி அமையும் பாரிய நன்னீPரேரியைக் கொண்டிருப்பதன் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நிலங்கள் விருத்தியடைந்து பன்மடங்கு நன்மையடையும்.

இதன் மூலம் நிலக்கீழ் நீர் தாராளமாக அமைவதோடு நீர் மட்டமும் உயர்வடையும் வருடங்கள் செல்லச் செல்ல கிணற்று நீர் மட்டமும் உயர்வடையும்.

இந்நிலத்தின் கீழுள்ள மண்ணின் ஈரப்பதன் அதிகரிக்கும். தாவர வளர்ச்சி பல்கிப் பெருகும். தென்னைகளுக்கும் ஏனைய மரங்களுக்கும் கோடையில் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி நிலைமை இல்லாமல் போகும். இத் திட்டம் அமைந்துள்ள ஏரியின் அண்மையில் உள்ள 15,000 ஏக்கரிலும் மேலான காணிகள் வேளாண்மை விருத்திக்கு உதவும். மேலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகும் கனகராயன் ஆற்றின் நீரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவந்து தொண்டமானாறு மற்றும் யாழ்ப்பாணப் பட்டிணத்தின் எல்லையில் அமைந்துள்ள அரியாலையில் உள்ள வானூடாக பாயச் செய்யும். இதுவே யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய சரியான தீர்வு.

(இலங்கை எந்திரிமார் சங்கத்தின் ஞாபகார்த்த வெளியீட்டில் கௌரவிக்கப்பட்ட மிகச் சிலரில் ஒருவரானவரும் முன்னாள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய எந்திரி.எஸ் ஆறுமுகத்தின் தூரநோக்கை விளங்குவதற்கு அடிப்படையாக 1954 இல் முதன் முறையாக வெளியிடப்பட்ட இக் கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.

தமிழாக்கம்
ஏந்திரி.ஏ.ரகுநாதன், இளைப்பாறிய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,
ஏற்பாட்டுக்குழு
எந்திரி.எஸ்.ஆறுமுகம் நினைவுப் பேருரை
யாழ்ப்பாணம் 11.01.2012)

This book contains all the details of available data on water in all the Irrigation Schemes in North and River basin in north
Google drive link of my book on Water Policy. This link can be shared to anyone interested
https://drive.google.com/…/1izjrNa2GAeROi21hrtjHob…/view
Book on Northern Water Policy Sivakumar 2021.pdf
drive.google.com
Book on Northern Water Policy Sivakumar 2021.pdf

(From Sivakumar Page)