லெனின்


ஷாரிடஸிலுள்ள இமாம் காதிப் தொழுகை மசூதிகளைச் சார்ந்த முஸ்லிம்கள் நன்கொடை பெற்று லெனின் சிலையை நிறுவ முடிவு செய்தனர்.
ஒவ்வொரு மசூதியும் வாரத்துக்கு 100 டாலர் என்று சிறுகச் சேர்த்தார்கள்.
இப்போது –
வீழ்ந்து உடைந்து பூட்டிவைக்கப்பட்டிருந்த சிலையைப் பழுது பார்த்து சீர்திருத்திய முஸ்லிம் பெருமக்கள் – முன்னிலும் பொலிவாக – பொன்னிற வண்ணப்பூச்சுடன் –
அழகிய பூங்காவின் நடுவில் – நீரூற்றுகள் சூழ –
கம்பீரமாக அந்தப் புரட்சித்தலைவனை நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.
“அவர் நாத்திகராக இருக்கலாம்.
கம்யூனிஸ்டுத் தலைவராக இருக்கலாம்.
ஆனால் – அவர் எங்கள் வரலாறு.
அதை ஒருபோதும் யாராலும் மறைக்க முடியாது” என்கிறார்கள் ஷாரிடஸ் நகரவாசிகள்.
சிலையைத் தகர்த்தால்
வீழ்கின்ற தலைவனா லெனின்?