அனுசரணையில் இருந்து விலகியது இலங்கை; அறிவித்தார் தினேஷ்


2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.