அனைத்து ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வரப்பட்டன.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் , இன்று (17) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட அனைத்து காணி ஆவணங்களையும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டதுடன், எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள்,மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.