அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன் உங்களுக்கு வீரரோ! – கருணா

பல அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன், உங்களுக்கு வீரரா?.. என்னை ரவிராஜின் கொலையில் முடிச்சு போட முயற்சிக்காதீர்கள் என்கிறார் கருணா..! அண்மையில் சில ஊடகங்கள் ரவிராஜ் கொலையுடன் எனது பெயரையும் இணைக்கலாம் என சிந்திக்கின்றார்கள், உண்மையிலேயே இதுபோன்ற அரசியல் கொலைகளை எதிர்த்தவன் நான், துரையப்பா முதல் நீலம் திருசெல்வம் வரை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்த போது இயக்கத்துக்குள்ளயே எதிர்ப்பை காட்டியவன் நான் என்கிறார் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் பதில் தலைவரும், கிழக்கு மாகாண தளபதியுமான கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முகநூல் மூலம் இன்று இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

மேற்படி அவரது பதிவில் “ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை கொலை செய்ய வித்திட்டவர் பிரபாகரன் தான் எனவும், இதுக்காக இக்கொலைகளை நிறைவேற்றிய பொட்டம்மானிடம் பலதடவை வாக்குவாதப்பட்டு உள்ளேன் எனவும்”, பதிவிட்டுள்ள கருணா…

“இந்த கொலை கலைச்சாரத்திற்கு வித்திட்டவர் பிரபாகரன், அவரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் ஏராளம், அந்த கொடுர கொலைகளையெல்லாம் கண்டியாத நீங்கள், ஏன் என்னை வம்புக்கு இளுக்கின்றீர்கள்?” எனவும்

“கொலைகாரர்கள் தண்டிக்கப்படவேண்டும் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, ஆயிரகணக்கான அப்பாவிகளை கொலைசெய்த பிரபாகரனை வீரனாய் பார்க்கும் நீங்கள், ஏன் எங்களில் பழிசுமத்த முற்படுகின்றீர்கள்? ஏன்?” எனவும் கேள்வி கேட்டு,

“அது உங்களுக்கு தெரியாத விடையமில்லை.., பிரபாகரனை கொலைகாரன் என்று கூறினால் உங்களால் பிளைப்பு நடத்த முடியாது, அதுதான் உண்மை.. அத்தோடு யாழ் ஏகாதிபத்திய புத்தியும் கூட” எனவும் பதிலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு “ஏன், விடுதலைப்புலிகள் அழிந்ததும் என்னால் என்றும் கூறுகின்றீர்கள்.. நாங்கள் பிரிந்ததின் பிற்பாடு, உங்களுக்கு உணர்சி இருந்திருந்தால், நீங்கள் அனைவரும் அணிதிரண்டு உங்கள் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாமே?”.. எனவும் கேள்வி எழுப்பியுள்ள கருணா
“கிழக்கு மாகாணத்தான் மட்டும் களத்தில் அழிய வேண்டும், நீங்கள் எல்லாம் வெளிநாடுகளில் பெண்டாட்டி பிள்ளைகள் என்று உயிர்வாழ வேண்டும். இனியாவது உங்களுக்கு மானம் ரோசம் இருந்தால், தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து தமிழனின் ஒற்றுமைக்கு உழையுங்கள். நன்றி” எனவும் கருணா ஆதரவு முகநூளில் பதிவிட்டு உள்ளார்.