அமெரிக்க குடியுரிமை விவகாரம்; உறுதிப்படுத்தியது எதிர்க்கட்சி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை அமெரிக்காவிடம் சமர்ப்பித்திருப்பதை எதிர்க்கட்சி உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று(​09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துகள் மேற்கண்ட விடயத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.