அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் நாளை முதல் அதிகளவிலான வெப்பநிலையுடனான வானிலை தொடருமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலைமையின் காரணமாக வரட்சி மற்றும் உடல் சோர்வுகள் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுமெனவும், இதனால் அதிகளவில் நீரை பருகுதல் என்பவற்றில் அதிகளவு அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.