ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்

தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இடையிலான ஆசனப்பங்கீடு குறித்த விடயங்க தொடர்பிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு 06-12-2017நடை­பெ­று­வ­தாக இருந்­த­போதும் ஏற்­க­னவே நிகழ்ச்சி நிர­லி­டப்­பட்­டதன் பிர­காரம் சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லைக்கு செல்ல வேண்­டி­யேற்­பட்­டதன் கார­ண­மாக குறித்த சந்­திப்பு எதிர்­வரும் 9ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­வ­தற்­கா­கவும் வேட்­பாளர் பட்­டி­யலை தயா­ரிப்­ப­தற்­கா­க­வுமே இரா.சம்­பந்தன் அங்கு சென்­றுள்­ள­தோடு மூன்று நாட்கள் அங்கு தங்­கி­யி­ருக்­க­வுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் பணிப்பின் பிரகாரம் ஆசனப் பங்­கீடு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடான நிலைமை குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ரெலோவின் தலைவரும் பிரதி குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலாநாதன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது ஆசனப்பங்கீடு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ள இடங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன மாற்றுவழியை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பிலும் ரெலோவின் முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் சுமந்திரன் பேசுவது என்றும் ரெலோ உறுப்பினர்களுடன் செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடுவது என்றும் இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முயல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.