ஆசிரியர் பற்றாக்குறைக்கு மிக விரைவில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, நேற்று ( 27)  நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.