ஆரையம்பதியில் மகளிர் தினம்

மார்ச் 08ஆம் (நாளை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, அதன் முதலாவது நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவுக்கு அருகில் நேற்று (06) நடத்தப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் தலைமையில்  ஆரம்பமானதுடன்,  இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் சூரியா கலாச்சார குழுவினரால் அளிக்கை செய்யப்பட்டது.