ஆலையடிவேம்பு, சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் மனுக்கள் நேற்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தது.

ஆனால் ஆலையடிவேம்பு பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் ஆவணப்படுத்தப்பட்ட விதத்திலும், தாக்கல் செய்யப்பட்ட முறையிலும் பிழைகள் இருப்பதை தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி இவ்வேட்பு மனுக்களை நிராகரிக்கின்ற தீர்மானத்தை அறிவித்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான மு. இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் என்று ஒரு பட்டாளமே தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக பிரசன்னமாகி இத்தீர்மானத்துக்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைத்தபோதிலும் அவை எடுபடவே இல்லை.