ஆளுமைகளில் இறுதியானவராக திருமதி. சிவபாக்கியம் ( பழனிசாமி) குமாரவேல்

மலையக அரசியல் வரலாற்றில் இலங்கை இந்திய காங்கிரஸ் இயக்கத்தில் செயற்பட்ட ஆளுமைகளில் இறுதியானவராக திருமதி. சிவபாக்கியம் ( பழனிசாமி) குமாரவேல் அம்மையாரை கொள்ளலாம். அவரது தந்தையர் என். எம். பழனிசாமி ( படத்தில் இருப்பவர்) இ.இ.காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர். அவரது பிள்ளைகளை பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வளர்த்துள்ளார். கலகா, கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா என எல்லா பிரதேசங்களிலும் இருந்து அம்மையாரின் சகோதரங்கள் வருகை தந்திருந்தார்கள். ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு வரலாற்று பின்புலம் இருந்ததை அறியமுடிந்தது. ” ஏன்.. மகன் அம்மாவை பார்க்க வரல” என ஒரு அழைப்பு கண்டியில் இருந்துவரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அ வரை வந்து நலம் விசாரித்து செல்வதுண்டு. ஒரு முறை குழந்தைகளையும் அழைத்துவந்து அம்மையாரின் வரலாற்றை சொல்லிக்கொடுத்தேன். இனி அழைப்பு வரப்போவதில்லை. இன்று இறுதியாக வழியனுப்பிவிட்டு திரும்புகின்றேன். இவர் போன்ற ஆளுமைகளை எழுத்தின் மூலமாக பதிவு செய்தல் அவசியம்.