‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்

தற்போதைய இக்கட்டான சூழ்நிலை காரணமாகவே, இந்த 730 ரூபாய் கொடுப்பனவுக்குச் சம்மதம் தெரிவித்ததாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இ.தொ.கா தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர், மேலும் தெரிவித்ததாவது,’

“கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி, புதிய ஒப்பந்தத்ததை கைச்சாத்திடப்படுவதற்கான சூழ்நிலை இல்லாததன் காரணத்தால், ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று (நேற்று) கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உண்மையில் இந்த 730 ரூபாய் கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு போதாது. தற்போதைய பொருளாதார நிலையையும் அடுத்த வாரம் வரவுள்ள தீபாவளி பண்டிகைளை கருத்திற்கொண்டே, இந்த 730 ரூபாய் கொடுப்பனவுக்குச் சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்” என்றார்.