இந்திய என்.ஐ.ஏ குழு இன்று வந்தது

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான,என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் தொடர்பைக் ​கொண்டிருந்தமைத் தொடர்பில், விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.