இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு, சமூக சேவை,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக இந்திய ஜனாதிபதி நியமிக்கலாம்.