இனவாதத்தை இல்லாதொழிப்பது …..

(Mkm Shakeeb)
நேற்றைய இனவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் “ஜனாஸா” நல்லடக்க நிகழ்வில் பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டிருந்த படங்களே கீழுள்ளவை..

இனவாதத்தை இல்லாதொழிப்பது அவர்களை மிக அற்ப குழுவாக தனிமைப் படுத்துவதிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் ( எல்லா சமூகங்களிலும்) உள்ள இனவாதமற்ற பெரும்பான்மை மக்களிடையே நல்லுறவையும் இன சௌஜன்யத்தையும் பலப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.

இனவாதம் பயங்கரவாதம் மதத் தீவிரவாதம் என்பன உடைமைகளையும் உயிர்களையும் அழிப்பதைதான் அவைகளின் வெற்றியாக கருதி வருகின்றன.. ஆனால் அவைகளால் மானுடம் மனிதாபிமானம் சகஜீவனம் போன்ற பெறுமானங்களை அழிப்பதில் ஒரு போதும் வெற்றிகாண முடிவதில்லை..

உடனடி பேரிழப்பாக பெரும் துயரமாக நடக்கும் நிகழ்வுகள் இருந்தாலும் அவை நல்லதும் நலன்பயத்தக்கதுமான விளைவுகளையே கொண்டு வரக் கூடியது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு விடயமுமாகும்..

முகநூலின் இனவாத பதிவுகளும் பகிர்வுகளும் நமக்கு பெரும் உலகைப் போல் மாயத் தோற்றம் தந்தாலும் உண்மையான மனிதாபிமானமும் புரிந்துணர்வும் அதுவல்லாத சமூகப் பெருவெளியில் சாதாரண சக ஜீவிகளிடமும் புத்திஜீவிகளிடமும் பரந்திருக்கிறது.. அவைகளை மிகப் பலமாக கட்டியெழுப்புவதில் தான் இனவாதம் எனும் தீ அணைக்கப்படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

பிற்குறிப்பு:
முகநூலில் இனவாதத்தையும் குரோதத்தையும் வளர்த்துக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் அவர்களால் சிறிது நேரம் கூட நிம்மதியாக உறங்கக்கூட முடிவதில்லை போல் தெரிகிறது..!!!