இன்றைய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல்

 

மாற்றுக் குரலுக்கான செயற்பாட்டாளர்கள், அமைப்பின் ஒழுங்கு படுத்தலின் விளைவாக , இன்று 17.09.2016, யாழ். நூலக உணவு விடுதியில், இன்றய இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் சூழல் பற்றிய விவாதம் நடைபெற்றது. மிகவும் நல்ல முயற்சி இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒரு முற்போக்கான மாற்றுத்தலமையை உருவாக்க வேண்டும் இது மக்களுக்கான கூட்டுத்தலமையாக அமைய வேண்டும். பெண்கள் பெருமளவில் வரவில்லை . அது ஒழுங்குபடுத்தியோரின் ‘நெட்வெர்க்’ ‘பற்றாகுறை’ அல்லது அழைக்கப்பட்ட அமைப்புகள் பெண்களை இதில் பங்கு அனுப்பவில்லை .. இதில் பெண்கள் சிலர் இந்த படங்களை எடுத்த எனக்கு பின்னால் , இருந்தனர். இதில் பங்குபற்றியோர் அனைவரின் படமும் இங்கு பிரசுரமாகவில்லை… இது ஒருபக்கமிருக்க , இந்த கூட்டத்தில் பெண்ணுரிமை, பெண்ணியம் பற்றி பலர் கருத்து தெரிவித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்களை ஏற்படுத்த போராட முடியும் ..