இன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு

குரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த ஹோட்டலில் 18 மணி நேரமாக எதுவித வியாபார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பெரும்பான்மையின உள்ளூர் வர்த்தக சங்கத்தினர் 200 பேர் இணைந்து இந்த மீள்நிர்மாணத்தை முன்னெடுத்தனர்.

கடந்த சில தினங்களாக நாட்டில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் கிளர்ச்சியை தூண்டுபவர்களுக்கு இது முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஆன­ம­டுவை மற்றும் தர்கா நகர் ஆகிய பகு­தி­களில் நேற்று அதி­காலை முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்ளன.

குரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவை நகரில் அமைந்­துள்ள முஸ் லிம் ஹோட்டல் மீதும், அளுத்­கம – தர்கா நகர், அதி­கா­ரி­கொ­டவில் உள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வீடொன்றின் மீதுமே இந்த குண்­டுத்­ தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த சம்­ப­வங்­களின் போது எவ­ருக்கும் ஆபத்­துக்கள் நேராத போதும் ஹோட்­டலும், வீடும் தீக்­கி­ரை­யாகி கடும் சொத்து சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஆன­ம­டுவை சம்­பவம்:

நேற்று அதி­காலை 2.00 மணி­ய­ளவில் ரஸ்­நா­யக்க புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட, ஒட்­டு­குளம் பகு­தியைச் சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான முஸ் லிம் ஹோட்டல் மீது திடீர் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. தாக்­குதல் நடத்­தப்­படும் போது ஹோட்டல் மூடிய நிலையி­லேயே இருந்­துள்­ள­துடன் நகரில் வழ­மை­யான பொலிஸ் பாது­காப்பும் இருந்­துள்­ளது.

குறிப்­பாக தாக்­குதல் இடம்­பெறும் போது அப்­ப­கு­தியில் பாது­காப்­புக்கு போடப் பட்­டி­ருந்த பொலிஸார் இரு­வரும் இருக்­க­வில்லை என தெரி­ய­வந்­துள்ள நிலையில், மிகத்­திட்­ட­மிட்டு இந்த தாக்­குதல் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

(Thesamnet)