இராஜினாமா செய்தார் குருகுலராஜா

வடமாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் இராஜினாமா கடிதத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரினிடம் கையளித்துள்ளார். முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து, இராஜினாமா செய்தார் குருகுலராஜா இன்று மாலை 5.30 மணியளவில், தனது இராஜினாமா கடிதத்தை, அவர் கையளித்துள்ளார். ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு, முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, முதலமைச்சருக்கு கையளித்துள்ள இராஜினாமா கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 2016.06.14 இல் நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில், தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில், குற்றம் சுமத்தப்பட்ட என்னையும் கௌரவ விவசாய அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசன் அமைச்சரையும், தாமாகவே பதிவியிலிருந்து விளகுமாறு கோரியிருந்தீர்கள்.

இயன்றவரை எனது இராஜினாமாக் கடிதத்தை தங்களுக்கு வழங்க முடியாததையிட்டு மனம் வருந்துகின்றேன். அதேவேளை, என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கு, என்னை எவ்விதத்திலும் பொறுப்பாக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகின்றேன்.

‘இதுவரை எனது இராஜினாமாக் கடிதத்தை தங்களுக்கு வழங்க முடியாததையிட்டு, மனம் வருந்துகிறேன். அதேவேளை, என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கு என்னை எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது என்ப​தை உறுதியாக நம்புகிறேன்.

என்னை, மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்த மக்களுக்கும் அமைச்சராக தெரிவு செய்த தங்களுக்கும் நான் ஒருபோதும் துரோகம் செய்ய விரும்பவில்லை. என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குற்றமற்றவை என, நான் நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனது தன்னிலை விளக்கத்தினூடாக நான் குற்றமற்றவர் என்பதை, நன்றாகவே ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். தாங்கள் என்னுடைய இந்த தன்னிலை விளக்கம் படித்திருக்கலாம் அல்லது மேலெழுந்தவாரியாக அதனை பார்வையிட்டிருக்கலாம். தன்னிலை விளக்கம் பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர், பலரது கவனம் அவ் விளக்கத்தினால் ஈர்க்கப்பட்டு என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குற்றங்களல்ல என்பதை எனக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்திருந்தனர்.

நான் இராஜினாமா க​டிதத்தை சமர்ப்பிப்பதனால் என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவற்றையும் ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும் என்கின்ற குற்ற உணர்வுடன், அமைச்சர் பதவியை துறக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளேன்

தாங்கள் சட்டரீதியான சுயாதீனமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மேன்முறையீட்டுக்குழு ஒன்றை நியமிப்பதற்காக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். இதனடிப்படையிலேனும் எனது தன்னிலை விளக்கத்தினூடாக எனது குற்றத்தை கழுவி, எனது மாசின்மையை எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சமரச முயற்சியினூடாக, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வேளையில், எனது கட்சியின் எதிர்கால நலனுக்காக சமரசத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்கிற முறையிலும் இன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்பதை, தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.