இராணுவ தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் வடக்குக்கான வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,”ஜநாவே போர்க்குற்றவாளி ஷவேந்திர சில்வாவை கைதுசெய், தமிழர்களின் பாதுகாப்புக்கு ஐ.நா அமைதி காக்கும் படையினை உடனடியாக அனுப்பு” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாட்டினது கொடிகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 944 நாள்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.