இராணுவ முகாமை அகற்றக் கோரி கவனயீர்ப்பு

மட்டக்களப்பு – முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமை அகற்றி, முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்துத் தருமாறும் மக்கள் போக்குவரத்துக்குரிய வீதியைத் திறந்து தருமாறு கோரியும், குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக, பிரதேச மக்களால் இன்று (08)காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.