இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

நேற்றும் அதிகரித்தன கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,441 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 05 பேரும் 30 வயதுக்குக் கீழ் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாடுமுழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகளின் வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் விரைவாக மூட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள பாடசாலைகளை உடனடியாக மூடாவிட்டால் சாதாரணத் தர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.