இலங்கையில் அமைதி நிசப்த்தம் நிலவுகின்றது

இலங்கையில் நடைபெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைதுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதுவரை இச்சம்பவம் யாரால் நடாதப்பட்டது என்ற உத்தியோக பூர்வ அறிவிப்பு வரவில்லை. நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு அமைதியான சூழலில் உள்ளது. அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயற்படுவதாக அறிய முடிகின்றது. வெளிநாடுகள் தமது ஆதரவை இலங்கை அரசிற்கு தெரிவித்தும் வருகின்றனர். ஊடகங்கள் நிதானமாக தமது செய்திகளை இதுவரை சமூகப் பொறுப்புடன் வெளியிட்டு வருகின்னர். இன மத சமூக வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவியாக அனுசரணையாக இலங்கை மக்கள் இருக்கின்றனர். வாழ்க சகோதரத்துவம்