இலங்கையில் குண்டு வெடிப்பு

உயிர்த்த ஞாயிறில் மூன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்,நீர்கொழும்பு புனித செபஸ்ரியர் தேவாலயம் ஆகிய இடங்களில் இக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சில விடுதிகளிலும் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகிறது. நண்பர்கள் இயன்றவரை அவதானமாகவும், முடிந்தவரை உதவியாகவும் இருங்கள்.
Explosion at Zion Church in Batticaloa. Many killed including Children…

6 இடங்களில் வெ​டிப்புச் சம்பவம்

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், கட்டுவான ​தேவாலயம், கிங்க்ஸ்பரி ஹோட்டல், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட் ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ​ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 50 பேருக்கு ​அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவகின்றனர். 10 பேர் மரணமடைந்துள்ளனர்.