இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் நேற்றைய தினம் 29 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,296 என தெரிவிக்கப்படுகின்றது.