இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 24 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 892 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 4 பேர் நேற்றும் (13), 12 பேர் நேற்று முன்தினமும் (12), 5 பேர் அதற்கு முதல் நாளும் (11) மே 10, 09, 08 இல் தலா ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.