இலங்கை: கொரனா செய்திகள்

சைனோஃபாம்தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ்` வழங்கும் நடவடிக்கை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து
ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம்
மேற்கொண்டிருந்தது.

மத்திய மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் பிரமுகர்கள்,சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய முக்கிய கூட்டம் மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே தலைமையில் ஆளுநர் மாளிகையில் இன்று (5) காலை நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ‘ஜீவன் குமாரவேல் தொண்டமான்‘ மத்திய மாகாணத்தில் வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா தடுபூசி வழங்குமாறு வலியுறுத்தினார்.