இலங்கை: 27 அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை விவரம்

27 அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு விலைகள் திங்கட்கிழமை (08) முதல் 3 மாத காலத்தில் செலுப்படியாகும் என, வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.