இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் யாழில் அதிபர் கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கான 1 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் அவர் இன்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.