இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.

நேற்று (05.05.2018) மீண்டும் ஒரு 24வயது இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நுண்கடன் அரக்கனுக்கு இது 7வது உயிர்ப்பலி.  வந்தாறுமூலையைச் சேர்ந்த டிசாந்தினி என்ற 24வயது இளம்பெண் நுண்கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை “மட்டக்களப்பு இளைஞர் வலையமைப்பு” செய்தி வெளியிட்டுள்ளது.