ஈரான் தலைநகருக்கு அருகில் உக்ரைன் விமானம் விழுந்து 176 பேர் உயிரிழப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரானின் இமாம் கொமைனி சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் 176 பேருடன் புறப்பட்ட உக்ரைன் ஏர்லன்ஸ் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. ஈரானியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருப்பதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.