ஈழத்தை கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எப்

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியானது, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், அதன் புதிய மத்திய குழு நிர்வாகிகளுக்கான முதலாவது கூட்டம், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாளும் கலந்துகொண்டிருந்ததுடன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் விரைவில் பதிவு நடைபெறுமெனவும் கூறினார்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஆட்சியமைத்த போதே ஈபிஆர்எல்எவ் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்டது. ஈபிஆர்எல்எவ் மட்டும் அல்ல சகல விடுதலை அமைப்புக்களும் அது புலிகள் உட்பட யாவரும் அவ்வாறே செயற்பட்டனர். சும்மா உசுப்பேத்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈறாக தனிநாட்டைக் காட்டி வருவது என்பதே யதார்த்த நிலமை இது சகல தமிழ் மக்களுக்கும் தெரிந்த விடயம்.