ஈழவிடுதலைப் போராட்டத்தின் இந்திய மூலவர் தோழர் ஸ்ராலின் அண்ணா எம்மை விட்டுப் பிரிந்தார்

 

ஈழ மக்களால் ஸ்ராலின் அண்ணா என்ற அறியப்பட்டவரும் கும்பகோணத்தை தனது வதிவிடமாகக் கொண்டவர் எம் மனங்களில் நிறைந்த வண்ணம் எம்மை விட்டுப் பிரிந்தார். தனது சொத்து, சுகம், குடும்பம், உறவுகள் எல்லாவற்றையும் ஈழ விடுதலைக்காக அற்பணித்தவர் தோழர் ஸ்ராலின் அண்ணா. கும்பகோணத்தின் எப்பகுதியிலும் ஸ்ராலின் அண்ணா என்று அறியப்பட்ட ஆர்.பி. ஸ்ராலின் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய உந்து சக்தியாக தன்னை 1970 களின் ஆரம்பகாலத்திருந்து அறியப்பட்டவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வளர்ச்சியிலும், வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றியவர். ஈழவிடுதலை அமைப்புகளில் தோழர் நாபா வுடன் மிக நெருக்கமான தொடர்புகளையும் நம்பிக்கையும் வைத்திருந்தவர் தோழர் நாபாவின் மரணம் தோழர் ஸ்ராலின் அரசியல் செயற்பாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தாலும் தொடர்ந்தும் ஈழ மக்களின் விடிவிற்காக செயற்பட்ட அர்பணிப்புமிக்கவர். இவரின் மறைவால் துயறிற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்கள் தோழர்களின் துயரங்களில் நாமும் இணைந்து கொள்கின்றோம்.