உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்தது சீனா

உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யூ, ரஷியாவுடனான போருக்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். அப்போது, இந்த போரை நிறுத்த ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரேன் மந்திரி கோரிக்கை விடுத்தார்.