உக்ரேனில் புதிய முனையைத் தாக்கிய ரஷ்யா

உக்ரேனின் வடகிழக்கிலுள்ள இரண்டாவது நகரமான கார்கிவ்வுக்கு அருகே கவசவாகன தரைத் தாக்குதலொன்றை நேற்று ஆரம்பித்த ரஷ்யப் படைகள் சிறியளவு முன்னேற்றங்களைப் பெற்று கிழக்குக்கும் தெற்குக்குமிடையே நீண்ட காலம் இடம்பெறும் போரில் புதிய முனையொன்றைத் திறந்துள்ளனர். மேற்குறித்த பிராந்தியத்தின் மோதல்கள் எழுந்துள்ள எல்லைப் பகுதிகளில் மேலதிக படைகளை உக்ரேன் அனுப்பியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.